• இலக்குக்குட்பட்ட கைத்தொழில் - எந்தவொரு கைத்தொழிலும்
  • தொழில்சார்ந்த சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான துறைகளில் பாண்டித்தியம் பெற்ற ஒரு குழு தொழிற்சாலைகளுக்குச் சென்று ஆரம்ப கூட்டத்தை நடத்தும்.
  • சரிபார்த்தல் பட்டியல் ஒன்றைப்பயன்படுத்தி தொழில் சூழலும் வேலை செய்யும் வளாகமும் மதிப்பீடு செய்யப்படும்.
  • தொழில் தருநர்களுக்கும் ஊழியர்களுக்கும் நேர்முகப் பரீட்சை நடத்தப்படும்.
  • இயந்திரப் பாதுகாப்பு, மின்சார பாதுகாப்பு, தீ, போக்குவரத்து, இரசாயனப் பொருட்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் மதிப்பீடு செய்யப்படும்.
  • அறிக்கைகளும் ஆவணங்களம் பரிசோதிக்கப்படும்.
  • தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் என்பவற்றில் தொழில் தருநருக்கும் ஊழியருக்கும் உள்ள பிணைப்பு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
  • கண்டறியப்பட்ட விடயங்களை அடிப்படையாகக்கொண்டு அறிக்கை வழங்கப்படும்.