• இலக்குக்குட்பட்ட கைத்தொழில் - எந்தவொரு கைத்தொழிலும்.
  • ISO அல்லது OSHA சான்றுப்படுத்தும் வரைக்கும் ஈடுபட்டுள்ள எந்தவொரு அமைப்பும்.

தகுதியுடைய பாதுகாப்பு மற்றும்  சுகாதாரம் தொடர்பான குழுவொன்றினால் வெளிக்களத்திற்கு சென்று இப்பரிசோதனை மேற்கொள்ளப்படும். அறிக்கைகைள், ஆவணங்கள், அவதானித்தவைகள்  மற்றும் நேர்காணல் என்பவற்றை அடிப்டையாகக்கொண்டு இப்பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

உண்மையாகவே இருக்கின்ற கைத்தொழில் இடர்கள் உள்ளடங்கிய அறிக்கையொன்று வழங்கப்படும். தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான பரிந்துரைகள் ACHIH தர மட்டத்தை அடிப்படையாகக்கொண்டு வழங்கப்படும். இவ்வறிக்கை ஒரு வருடத்திற்கு மாத்திரம் செல்லுபடியாகும்.

செல்லுபடியாகும் அவதானிப்புகளையும் ஊழியர் மதிப்பீடுகளையும் அடிப்படையாகக்கொண்டு இடர் தொடர்பான புள்ளிகள் கணிப்பிடப்படும். அவ்வறிக்கையை அடிப்படையாகக்கொண்டு தொடர்ச்சியான மேம்படுத்தல்களுக்குப் பரிந்துரைகள் வழங்கப்படும்.