கைத்தொழில் துறையில் வேலை செய்கின்றவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான பாண்டித்தியம் மிக்க அறிவைப் பெற்றுக்கொடுப்பதற்காக தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய நிறுவனம் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சம்பந்தமான தேசிய டிப்ளோமா பாடநெறிகளை நடாத்துகிறது.

இப்பாடத்திட்டத்தில் தொழில்சார்ந்த சுகாதாரம் தொழில் பாதுகாப்பு, பாதுகாப்பு, முகாமைத்துவம் ஆகிய பிரதான மூன்று துறைகளிலும் பாடத்திட்டத்தைப் பூர்த்தி செய்கின்ற அம்சமாக செய்யவேண்டியுள்ள பாடநெறியில் கலந்துகொள்கின்றவர்கள், வேலைகளில் கலந்துகொள்கின்றவர்கள் மற்றும் வேலை செய்கின்ற சூழலில் தொழில் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் மேம்படுத்துகின்றமுறைபற்றிய கருத்திட்டத்தைப் பூர்த்திசெய்தல் போன்றவை உள்ளடங்கியிருக்கும்.

பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்

  • தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை அறிமுகப்படுத்துதல். அதன் குறிக்கோலும் அமைப்பு விதிகள்
  • தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பாக விடயங்களை ஆவணப்படுத்தும் செயல்முறை
  • திடீர் விபத்துக்களை விசாரித்தல்
  • இழக்கும் வேலை செய்யும் மணித்தியாலக் கணக்கை கணிப்பிடல்
  • பரவும் நோய்களும் அவை வேலைத்தலத்திற்கு தாக்கமேற்படுத்தும் முறையும்
  • கருத்திட்டங்களுக்கான வழிகாட்டல், கருத்திட்டங்களை அங்கீகரித்தல்
  • பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட குற்றவியல் சட்டம்
  • சூழல் மாசடைதலும் சுகாதாரத்திற்கு அது தாக்கமேற்படுத்தும் முறையும்
  • தொழிற்சாலைகளைப் பரிசோதித்தல்
  • செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சமிக்ஞை முறைமைகளில் மனிதாபிமான காரணிகள்
  • மாணவர்களின் விடய சமர்ப்பணத்திற்கு தயார்படுத்தல்
  • நடத்தையை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு முகாமைத்துவம்
  • துணை ஒப்பந்த ஊழியர்கள்
  • நபர்களுக்கிடையிலான தொடர்பு
  • மீட்டல்
  • பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான ஒழுங்குவிதிகள், உலக மற்றும் உள்ளூர் எதிர்பார்ப்புகள், சட்டமும் விதிகளும்
  • தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தரங்கள் ISO 1800
  • காயங்கள் ஏற்படக்கூடிய நிலையான தன்மை, கடுமையான தன்மை, நிகழ்வு விகிதம்.
  • அடிப்படை புள்ளிவிபரங்கள்
  • ஆய்வு முறைகள், கருத்திட்ட ஆவணங்களை மாணவர்களுக்கு கொடுத்தல்
  • சுகாதார மற்றும் பாதுகாப்பு குழுக்களை உருவாக்குதல், பொறுப்புகளை ஒப்படைத்தல்
  • தலைப்புகளை அங்கீகரித்தல் மற்றும் திட்ட முன்மொழிவுகளை எழுதுவது தொடர்பான கலந்துரையாடல்
  • அனர்த்தங்களை அடையாளம் காணுதல்
  • அடிக்கடி நிலைய அவசர நிலைகளைத் திட்டமிடல்
  • செயற்பாடுகள் தொடர்பான மனிதத் தவறுகள்
  • பாதுகாப்பைத் திட்டமிடல் மற்றும் மதிப்பீடு செய்தல், உபகரணங்களுடனான முறைமைகள் மற்றும் மனிதத் தவறுகளை தவிர்த்தலும் கட்டுப்படுத்தலும்
  • நிறுவனத்தின் தன்மையும் வேலை செய்யும் கலாசாரமும். (பல்வேறு கைத்தொழில்கள்)
  • கற்கை விடுமுறைகள்
  • வேலைகளைத் திட்டமிடல் தொடர்பான தொடர்பாடல்
  • பரீட்சை மொடியுல் 1
  • இரசாயன காரணிகள் - இடர்களை மதிப்பீடு செய்தல்
  • தொழில்சார்ந்த நோய்கள்
  • உயிரியல் காரணிகள் - இடர்களை மதிப்பீடு செய்தல்
  • வினைத்திறன் உள்ளவர்களாக இருப்பதற்கு காரணமாய் இருக்கின்ற வேலை செய்யும் நிலைகள் 1
  • உளவியல் சமூக காரணிகள் - இடர்களை மதிப்பீடு செய்தல்
  • கருத்திட்ட மதிப்பீடு - முன்னேற்றத்தை மதிப்பீடு செய்தல்
  • தடுக்கும் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்
  • மாணவர்கள் தாம் வேலை செய்யும் இடங்களில் சுகாதார சீர்குலைவுகள் தொடர்பான விடயங்களை முன்வைத்தல்
  • முதலுதவி
  • கற்கை விடுமுறைகள்
  • நச்சுத்தன்மையடையும் முறைகள்
  • கைத்தொழில்களில் போக்குவரத்து பாதுகாப்பு
  • உணவுப் பாதுகாப்பு
  • உடலியல் காரணிகள் - இடர்களை மதிப்பீடு செய்தல்
  • தொழில்சார்ந்த நன்மைகள்
  • வினைத்திறன் உள்ளவர்களாக இருப்பதற்கு காரணமாய் இருக்கின்ற வேலை செய்யும் நிலைகள் 2
  • தொழில்சார்ந்த நன்மைகள்
  • வேலை செய்யும் இடத்தில் நலனோம்பல்
  • மீட்டல்
  • பரீட்சை மொடியுல் 2
  • வளாகத்தின் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள்
  • வேலை செய்யும் உபகரணங்கள் மற்றும் கல்வி சார்ந்த கருவிகள், கை கருவிகள்
  • கட்டிடம் மற்றும் நிர்மாணம் சார்ந்த நடவடிக்கைகள்
  • கருத்திட்டங்களைப் பூர்த்தி செய்யும் மிளாய்வு
  • தீ, வெடிப்புகள், உள்ளக வெடிப்புகள்
  • தொழில் சங்கங்கங்கள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு
  • கலந்துரையாடும் திறன்
  • கற்கை விடுமுறைகள்
  • இயந்திரங்களின் பாதுகாப்பு
  • மின்சார பாதுகாப்பு
  • கட்டிடம் மற்றும் நிர்மாணம் சார்ந்த நடவடிக்கைகள் தொடர்பான பாதுகாப்பு
  • சர்வதேச முகவர் நிலையங்களின் செல்வாக்கும் அவற்றுடனான தொடர்பும்
  • முறைசாரா பிரிவுகளின் பாதுகாப்பும் சுகாதாரமும்
  • மீட்டல்
  • பரீட்சை மொடியுல் 3

பயிற்சி பெற்ற நபர்களில் ஒருவர் ஒழுங்கான பாதுகாப்பு உத்தியோகத்தராக சேவையாற்றுவார்.

பாடநெறிக் கட்டணம்  : ரூ. 95,000/=
பாடநெறிக் காலம்  : 01 வருடம் (ஞாயிற்றுக்கிழமை)
இடம்  : தொ.பா.சு.தே. நிறுவனத்தின் கேட்போர் கூடம்
மேலதிக விபரங்களுக்கு  : +94 112 585 425 (நீடிப்பு:109)
இலக்கு குழு  : தொழிற்சாலை மேலாளர்கள், 5 வருடங்களுக்கு மேல் இத்துறையில் வேலை செய்து வரும் பாதுகாப்பு அதிகாரிகள்

*ஒவ்வொரு நபரையும் வெவ்வேறாக நேர்முகப்பரீட்சைக்கு உட்படுத்தியதன் பின்னர் பரீட்சார்த்திகள் தெரிவு செய்யப்படுவர்.

NIOSH offers tailor made training packages to any industry regarding any OSH issues and NIOSH will provide a certificate to the industry. Further more NIOSH has introduced a "SafetyPassport" for any of our trainees which valid for one year. The refresher training will be organized to continue the safety passport.