பூர்வாங்க மற்றும் அவ்வப்போது நடைபெறுகின்ற மருத்துவ பரிசோதனை என்பது ஊழியர்களின் மருத்துவ மதிப்பீட்டை குறிப்பாக குறித்தொதுக்கியிருக்கினறது. ஊழியர்களை தகுதியான வேலைகளில் அமர்த்துகின்றபோது இது அதி முக்கியமான பிரிவாகும். வேலைகளை வினைத்திறன்மிக்கவகையில் நிறைவேற்றுவதற்காக ஊழியர்களின் சுகாதார நிலையை அவ்வப்போது மதிப்பீடு செய்து பார்ப்பது அத்தியாவசியமானதாகும். உயிரியல் ஆய்வுகள் குறித்த வேலைகளை உற்பத்தித்திறன் மிக்க வகையிலும் வினைத்திறன் மிக்கவகையிலும் நிறைவேற்றுவதற்குத் தேவையான உடற்றகுதி ஊழியர்களுக்கு இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை அதன்மூலம் கைத்தொழிலில் ஊழியர்கள் சமுகமளிக்காத நிலையும் சுகாதார செலுவுகளும் குறையும்.

ஊழியர்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய நிறுவனத்தால் பின்வரும் சேவைகள் வழங்கப்படுகின்றன.

உடல் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, நுரையீரலின் செயற்பாட்டைப் பரிசோதித்தல், செவிப்புல நிலையை அளந்தறியும் பரிசோதனை உள்ளிட்ட கம்பனியின் மருத்துவ பரிசோதனைகள்.

இச்சேவை தொடர்பான சிறப்பம்சம்

இடர்களை அடையாளம் காண்பதை அடிப்படையாகக் கொண்ட பூர்வாங்க மற்றும் மருத்துவ சேவைகளை வழங்குகின்ற ஒரே அரச அமைப்பு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய நிறுவனமாகும். வெளிக்கொணரப்படுகின்ற விடயங்களை அடிப்படையாகக்கொண்ட சுகாதார நிலையை மதிப்பீடு செய்வதை மருத்துவப் பரிசோதனை முக்கியமாக இலக்காகக் கொண்டிருக்கின்றது. குறித்த விடயங்களை அடிப்படையாகக்கொண்ட அறிக்கையொன்றை ஊழியருக்கு வழங்குகின்ற அதேவேளை ஊழியரின் சுகாதார மதிப்பீட்டையும் இடர்களையும் இனம் காண்பதை அடிப்படையாகக்கொண்ட விசேட அறிக்கையொன்று கம்பனிக்கு வழங்கப்படும்.

சேவைகளின் தன்மை

 

கைத்தொழில் இருக்கும் பிரதேசத்தில் சத்தத்தின் நிலை மிக அதிகமாக இருந்தால்,

  • செவிப்புல நிலையைக் காட்டுகின்ற வரைபடமொன்று தயாரிக்கப்பட்டு தனிப்பட்டமுறையில் கொடுக்கப்படும்.

இலக்கு ஊழியர்

சத்தத்திற்கு உள்ளாகியிருப்பவர்கள்

தொடர்புகளுக்கு

திருமதி. ரம்யா ஜம்புரேகொட

+94 112 585 425 (நீடிப்பு: 103)

  • மொத்த இரத்த கணிப்பீடு
  • ஈரலின் செயற்பாட்டைப் பரிசோதித்தல்
  • நீராகாரமற்று இருக்கச்செய்து இரத்தத்தில் உள்ள சீனி பரிசோதிக்கப்படும்.

தொடர்புகளுக்கு

திருமதி. ரம்யா ஜம்புரேகொட

+94 112 585 425 (நீடிப்பு: 103)

பின்வரும் காரணிகளை அடிப்படையாகக்கொண்டு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய நிறுவனத்தால் வழங்கப்படுகின்ற இச் சேவை மிகவும் தனித்துவமானதாகும்;

  • வேலை செய்வதற்குள்ள பொருத்தமான நிலையை மதிப்பீடு செய்து பார்க்கின்ற அரச அனுமதி பெற்ற ஒரே நிறுவனம் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய நிறுவனமாகும்.

அது இரண்டு படிமுறைகளைக் கொண்டதாகும்.

  • தொழிற்சாலைக்குச் செல்தல்
  • மருத்துவ பரிசோதனையை நடத்தி அறிக்கையை வழங்குதல்.

தொழிற்சாலைக்குச் செல்தல்

குறித்த கைத்தொழிலில் இருக்கும் ஆபத்தை அறிந்துகொள்ளும் அடிப்படை நடவடிக்கை தொழிற்சாலைக்கு செல்வதாகும்.

மருத்துவ பரிசோதனையை நடத்தி அறிக்கை வழங்கல்

  • தொழிற்சாலைகளுக்குச் சென்று கண்டறிந்த விடயங்களை அடிப்டையாகக்கொண்டு தகுதியுள்ள தொழில்சார்ந்த உடற்கூற்று மருத்துவர் ஒருவர் கம்பனி வளாகத்தில் உடல்ரீதியாக பரிசோதனை செய்வார்.
  • அடையாளம் காண்கின்ற தொழில்சார்ந்த விபத்துக்களை அடிப்படையாக்கொண்டு ஊழியர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள்.
  • அவர்கள் இரத்தப் பரிசோதனை, செவிப்புல நிலையை அளந்தறியும் பரிசோதனை, நுரையீரலின் இயக்கத்தைக் கண்டறியும் பரிசோதனை, கண் பரிசோதனை என்பவற்றுக்கு உட்பட வேண்டும்.

பரிசோதனையில் உள்ளடக்கப்படுபவை

  • உடற் பரிசோதனை
  • இரத்த அழுத்தம்
  • BMI பரிசோதனை

வேலை செய்யும் வளாகம் தூசு உள்ள இடமாக இருப்பின் அல்லது ஊழியர்கள் இரசாயன பொருட்களின் தாக்கத்துக்குள்ளாகியிருப்பின்,

  • FVC/FEC/PEFR அறிக்கை பெறப்படும்.

இலக்கு ஊழியர்கள்

வேலை செய்கின்ற மற்றும் தூசுக்கு அகப்படுகின்ற ஊழியர்கள்

தொடர்புகளுக்கு

திருமதி. ரம்யா ஜம்புரேகொட

+94 112 585 425 (நீடிப்பு: 103)

கண்பார்வைத் திறனை அடிப்படையாகக்கொண்டு ஊழியர்களை கண்பார்வை பரிசோதகரிடம் அனுப்பி தேவைப்பட்டால் மூக்குக் கண்ணாடி இலவசமாக வழங்கப்படும்.

அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்கள்

நபரை அடிப்படையாகக்கொண்டு இவ்வறிக்கை வழங்கப்படும்.

  • பின்வரும் காரணிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் - விபத்துகளுக்குள்ளாதல்
  • கடந்த கால மருத்துவ வரலாறு
  • தொழில் வரலாறு
  • போக்குகளின் பகுப்பாய்வு

ஒரு வருடத்திற்கு மாத்திரம் செல்லுபடியாகும்

அறிக்கையின் கட்டமைப்பு

  • கைத்தொழிலுக்கு விசேஷமான அறிமுகப்படுத்தல்.
  • வேலை செய்யும் நடைமுறைகளுக்கு விசேஷமானதும் இயந்திரங்கள் கருவிகளுக்கு விசேஷமானதுமான வேலை செய்யும்  சூழலியல் மதிப்பீட்டு அறிக்கை.
  • அளவையை அடிப்படையாகக்கொண்ட பெறுபேறுகள்.
  • பெறுபேறுகள் தொடர்பான வரைவிலக்கணம்.
  • பெறுபேறுகளை அடிப்படையாகக்கொண்ட பரிந்துரைகளும் இறுதி முடிவும்.

கைத்தொழிலுக்கு கிடைக்கின்ற பயன்கள்

  • நபரையும் கம்பனியையும் அடிப்படையாகக்கொண்டு சட்டரீதியாக செல்லுபடியாகும் ஆவணங்களைத் தயாரித்துக்கொள்ளக்கூடியதாக இருத்தல்.
  • ஒலியின் காரணமாக ஏற்படக்கூடிய செவிப்புல சக்தி இல்லாமற்போவதை தளர்த்தும் பரிந்துரைகள் அறிக்கையில் உள்ளடங்கியிருப்பதால் கைத்தொழிலில் ஏற்படும். சுகாதார செலவுகளைக் குறைத்துக்கொள்ளக்கூடியதாக இருத்தல்.
  • தேசிய பாதுகாப்புக்கும் சுகாதார சட்டத்துக்கும் ஒத்திசைவாக இருத்தல்.
  • ISO/OSHA சான்றிதழ்களுக்கு அதிக பெறுமதி கிட்டுதல்.
  • ஊழியர் சமுகமளிக்காமை, தொழிலில் திடீர் விபத்துகள் மற்றும் தொழில்சார்ந்த நோய்கள் குறைவதைல் இலாப பங்களிப்பு அதிகரித்தல்.
  • தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக சரியான தீர்மானம் எடுக்கக்கூடியதாக இருத்தல்.

சேவையைப் பெற்றுக்கொள்ளும் முறை

இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்க.

தொடர்புகளுக்கு

திருமதி. ஏ.எச்.சி. இசங்கி / திருமதி. எம்.எச். உபேக்சா மதுரங்கிகா

+94 112 585 425 (நீடிப்பு: 103)